×

4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவக்கம்: 3 மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் நேற்றே கொளுத்தியது

சென்னை: தமிழகத்தில் வரும் 4ம் தேதி முதல் கத்ரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. அது மே மாதம் 28ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த காலத்தில் அதிகபட்ச வெயில் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலையால் வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி திருச்சி, திருத்தணி, வேலூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர்,மதுரை 100 டிகிரி, ஈரோடு, தஞ்சாவூர் 99 டிகிரி, சென்னை 97 டிகிரி வெயில் நிலவியது. தமிழகத்தில் வரும் 4ம் தேதி முதல் கத்ரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. அது மே மாதம் 28ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த காலத்தில் அதிகபட்ச வெயில் பதிவாகும். இதன் காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனத்தால் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் நேற்று பெய்தது. அதில் அதிகபட்சமாக ராதாபுரத்தில் 60மிமீ மழை பதிவாகியுள்ளது. நிலக்கோட்டை, சூரளக்கோடு, வால்பாறை 50மிமீ, நீலகிரி 30மிமீ, புத்தன் அணை,பெருஞ்சாணி அணை, வால்பாறை 20மிமீ, அழகரை, ஒட்டன்சத்திரம், ஒகேனக்கல், உத்தமபாளையம், வறளியாறு, பிலவாக்கல், பூதப்பாண்டி, வத்திராயிருப்பு, நாங்குனேரி 10மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது  முதல் மிதமான மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக  கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் 23ம் தேதி வரை  லேசானது முதல் மிதமான மழை பெய்யும்….

The post 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவக்கம்: 3 மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் நேற்றே கொளுத்தியது appeared first on Dinakaran.

Tags : Agni Nakshatra ,Chennai ,Katri Veil ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்...